இன்றைய நிகழ்ச்சி
கோயில்
* பிரம்மோற்ஸவ விழா: காளியம்மன் கோயில், எஸ்.எஸ்.காலனி, மதுரை, பொங்கல் வைத்தல், காலை 8:00 மணி, அக்னிச்சட்டி, பறவை காவடி எடுத்தல், மதியம் 3:00 மணி, இசை கச்சேரி, இரவு 7:00 மணி.
* வருஷாபிஷேகம்: காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருவள்ளுவர் நகர், பழங்காநத்தம், மதுரை, பொங்கல் பூஜை, காலை 8:00 மணி.
* கார்த்திகை பூஜை: சக்தி விநாயகர் கோயில், ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகம், மதுரை, காலை 10:00 மணி.
* குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு
* நாம சங்கீர்த்தனம்: நிகழ்த்துபவர் - ஸ்ரீநாத் தாஸ் சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பிராமணர் சங்கம், மாலை 6:15 மணி.
* கிருஷ்ணம்மாள் நினைவு அறக்கட்டளை ஆன்மிக சொல்லரங்கம்: நிகழ்த்துவோர் - ஞானசம்பந்தன், இளங்கோ, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* சத்சங்கம், திருப்புகழ் பஜனை: நிகழ்த்துபவர் - திருப்புகழ் இசை வழிபாட்டுக் குழு, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்சனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
* முரளீதர சுவாமியின் சீடர் முரளீஜி - ஆன்மிக சொற்பொழிவு: வரதராஜ பெருமாள் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், ஹார்விபட்டி, மதுரை, மாலை 6:30 மணி.
* பகவத்கீதை - அத்தியாயம் 2: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பொது
* 'சிறார்கள் கொண்டாடும் சித்திரை திருவிழா' நுால் வெற்றி விழா, எழுத்தாளர்கள் சந்திப்புக் கூட்டம்: அர்பன் ஸ்பைஸ் கேலரி, கே.கே.நகர், மதுரை, சிறப்பு விருந்தினர்: மதுரை யாதவா கல்லுாரி முதல்வர் ராஜூ, ஏற்பாடு: புக் கில்ட் ஆப் மதுரை, மாலை 5:30 மணி.
* மகாத்மா காந்தியின் தொகுப்பு நுால்கள் பகுதி 22 - நுால் மதிப்புரை கூட்டம்: காந்தி மியூசியம், மதுரை, மதிப்புரை வழங்குபவர்: மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், காலை 10:30 மணி.
* மாதாந்திர இசை நிகழ்ச்சி: ஓட்டல் தமிழ்நாடு (பாண்டியன்), அழகர்கோவில் ரோடு, மதுரை, பாட்டு - ப்ரஜ்னா அடிகா, வயலின் - ப்ரித்வி பாஸ்கர், மிருதங்கம் - ப்ரஜ்வால் பரத்வாஜ், ஏற்பாடு: ராகப்பிரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி.
கண்காட்சி
* ப்ளூம் இன் கார்டன் - புடவைகள், சல்வார் சூட்கள் தள்ளுபடி விற்பனை: விஜய் மஹால், 80 அடி பைபாஸ் ரோடு, கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.