காங்கோ அணியில் தமிழக வம்சாவளி வீரர்
சென்னை: உலக கோப்பை கால்பந்து போட்டியில் தமிழக வம்சாவளியை சேர்ந்த வீரர் ஒருவர் காங்கோ அணிக்காக விளையாடி அனைவரின் கவனத்தை பெற்றுள்ளார்.
பிபா நடத்தும் 23வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் நடந்து வருகிறது. இந்த தொடரில் 48 அணிகள் பங்கேற்றுள்ளன. ஆனால், இந்தியா தகுதி பெறவில்லை. இது இந்திய கால்பந்து ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 வீரர்கள் பல நாடுகளின் அணிகளில் விளையாடி வருகின்றனர். அவர்களில் நியூசிலாந்து அணிக்காக சுர்ப்ரீத் சிங், கத்தார் அணிக்காக துஷீன் முகமது ஜம்ஷித் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியா அணிக்காக தமிழக வம்சாவளியைச் சேர்ந்த நிஷான் வேலுப்பிள்ளை ஒருவர். இவர் உலக கோப்பை போட்டியில் விளையாடிய முதல் தமிழ் வம்சாவளி வீரர் ஆனார். இவரது தாய் ஆங்கிலோ இந்தியர்.
தந்தை சசிநாத், மலேஷியாவில் குடியேறிய இலங்கை தமிழ் வம்சாளியைச் சேர்ந்தவர். இவர்கள் குடும்பம் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆனது. நிஷான் வேலுப்பிள்ளை மெல்போர்னில் பிறந்து கால்பந்து ஆர்வம் காரணமாக கிளப் அணிக்காக விளையாடி ஆஸ்திரேலியா அணியில் இடம்பெற்றுள்ளார்.
இவரைத் தொடர்ந்து தமிழர்களின் கவனம் பெற்ற மற்றொரு வீரராக சாமுவேல் முத்துசாமி உள்ளார். இவரும் தமிழக வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். காங்கோ அணியில் நடுகள வீரராக உள்ளார். பிரான்சின் பாரீசில் 1996 ம் ஆண்டுபிறந்தஇவரது தாய் காங்கோவைச் சேர்ந்தவர். தந்தை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.
2003 முதல் கால்பந்து விளையாட துவங்கினார். பவுல்க்னே பிலியன்கோர்ட், மோன்ட்ருகே கால்பந்து கிளப்புக்காக விளையாடினார். பல்வேறு கிளப் அணிக்காக விளையாடிய இவர் 2019 ம் ஆண்டு காங்கோ அணியில் முதல்முறையாக இடம்பெற்றார். அல்ஜீரியா அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான இப்போட்டி டிராவில் முடிந்தது. பிறகு 2023ம் ஆண்டு நடந்த ஆப்ரிக்கா கோப்பைக்கான தொடருக்கு அணிவிக்கப்பட்ட 24 பேரில் ஒருவராக இருந்தார்.
பிபா உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற இவர் நேற்று போர்ச்சுக்கல் அணிக்கு எதிராக களமிறங்கினார்.
His father is an Indo Gaudolopean origin of Tamil descent. Taken from Pondicherry to Carribbean island by the French to work as slaves in sugar cane fields. ஆனால் இது நசுக்கப்பட்ட பிதுக்கப்பட்ட வகையில் வராது.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்
வெற்றி பெருக
தமிழர்கள் எங்கிருந்தாலும் வாழ்க
வாழ்க வெற்றி பெருக
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
எங்கிருந்தாலும் வாழ்க
தலை நிமிர்ந்து நில்லடா
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா