ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழு கூட்டம் 

புதுச்சேரி: புதுச்சேரி மாநில ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழு கூட்டம், கோட்டகுப்பம் தனியார் ஓட்டலில் நடந்தது.

மாநில ஒலிம்பிக் சங்க தலைவர் முன்னாள் அமைச்சர் தேனீ ஜெயக்குமார்  தலைமை தாங்கினார். ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் வளவன் முன்னிலை வகித்தார். சி.இ.ஓ., முத்து கேசவலு வரவேற்றார். துணை தலைவர்கள் குணசேகரன், பிரதாபன், ஜெயராஜ், கோபு, ஆரிசாமி மற்றும் இணைச் செயலாளர்கள் ஜெயபால், கோவிந்தசாமி சுரேஷ், நிர்வாக குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், பூபாலன், கோடீஸ்வரன் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எதிர்காலத்தில் புதுச்சேரி மாநிலத்தில் விளையாட்டு வளர்ச்சி அடைவதற்கும், ஒலிம்பிக் சங்க எதிர்கால திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Advertisement