பாவம் நீக்கும் பசு ஸ்லோகம் சொல்லுங்க!

ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சமாகவோ அல்லது பலம் இழந்தோ இருந்தால் பசுசாபம் இருக்கும் என்று ஜோதிடசாஸ்திரம் கூறுகிறது.  இதனால், தம்பதியருக்குள் ஒற்றுமை இல்லாமல் பிரிந்திருக்க நேரிடும். இதற்குப் பரிகாரமாக வெள்ளிக்கிழமையில் பசுவை வழிபடுவது  சிறந்த பரிகாரம். காலையில் நீராடி பச்சைப்புல், அகத்திக்கீரை முதலியவற்றை எடுத்துக் கொண்டு பசுவை மூன்றுமுறை வலம் வந்தபடி  இந்த பசு ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். கொடிய பாவம் கூட இவ்வழிபாட்டின் மூலம் நீங்கும் என்று முனிவர்கள் கூறியுள்ளனர்.  இவ்வழிபாட்டை வெள்ளியன்று சுக்கிர ஓரையில் செய்வது மிகவும் சிறப்பாகும்.
காமதேனு-பெயர் விளக்கம்: தேவலோக பசுவை காமதேனு என்பர். காமம் என்றால் விருப்பம். தேனு என்றால் இளங்கன்றுடன் கூடிய பசு.  விரும்பியதைத் தரும் இளங்கன்றுடன் கூடிய பசு என்று அர்த்தம். காமதேனுவின் கன்றிற்கு நந்தினி என்று பெயர்.