பாரிஸ் ஒலிம்பிக் சாதனைகள்

பாரிஸ் ஒலிம்பிக்கில் பதிவான சாதனைகள் சில...

* ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற அர்ஷத் நதீம், ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் பாகிஸ்தான் நட்சத்திரமானார். அதிக துாரம் எறிந்த (92.97 மீ.,) இவர், புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார்.

* ஆண்களுக்கான 4x400 மீ., தொடர் ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் அமெரிக்க அணி (3 நிமிடம், 07.41 வினாடி) உலக சாதனை படைத்தது.

* ஆண்களுக்கான 'போல்வால்ட்' போட்டியில் சுவீடனின் அர்மாண்ட் டுப்ளான்டிஸ் (6.25 மீ.,) 9வது முறையாக உலக சாதனை படைத்தார்.

* மல்யுத்த போட்டியில் ('கிரிகோ-ரோமன்' 130 கிலோ) கியூபாவின் மிஜைன் போபஸ் நுனேஸ், தொடர்ச்சியாக 5 தங்கம் (2008-2024) வென்று உலக சாதனை படைத்தார்.

* பெண்களுக்கான 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்காவின் சிட்னி மெக்லாலின்-லெவ்ரோன் (50.37 வினாடி) உலக சாதனை படைத்தார்.

* ஒரே ஒலிம்பிக்கில் நான்கு தங்கம் வென்ற முதல் பிரான்ஸ் நீச்சல் வீரர் லியான் மர்சந்த்.

* பெண்களுக்கான நீச்சல் போட்டி 1500 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் அமெரிக்காவின் கேட்டி லெடிக்கி (15 நிமிடம், 30.02 வினாடி) ஒலிம்பிக் சாதனை படைத்தார்.
* பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் செயின்ட் லுாசியாவின் ஜூலியன் ஆல்பிரட் தங்கம் வென்றார். இது, ஒலிம்பிக் வரலாற்றில் செயின்ட் லுாசியா நாட்டிற்கு முதல் பதக்கம்.

Advertisement