சண்டையிடும் பள்ளிக்குழந்தைகள்; இஸ்ரேல், ஈரானை சொல்கிறார் டிரம்ப்

1

வாஷிங்டன்: இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதல் என்பது, 'பள்ளி முன்பு இரு குழந்தைகள் சண்டையிடுவது போன்றது' என அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கேலி செய்தார்.


இஸ்ரேல் மீது ஈரான் 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா மரணத்திற்கு பழிவாங்குவதற்கு தாக்குதல் நடத்தினோம் எனவும், நாங்கள் போரில் வெற்றி பெற்றோம் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:


மத்திய கிழக்கில் அமெரிக்கா கணிசமான பங்கை வகிக்கும். இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் ஒருபோதும் நிகழ்ந்து இருக்க கூடாது. இது உண்மையில் மோசமாக உள்ளது. அவர்கள் மோதலை நிறுத்தி கொள்ள வேண்டும். இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதல் என்பது பள்ளி முன்பு இரு குழந்தைகள் சண்டையிடுவது போல் உள்ளது. இது பயங்கரமான போர். இதே நிலைமை தொடர்ந்தால் என்னவாகும் என்று உங்களுக்கு தெரியும்.


3ம் உலக போர்




மூன்றாம் உலகப் போரைப் பற்றி நான் நீண்ட காலமாகப் பேசி வருகிறேன். கணிப்புகள் எப்போதும் நிறைவேறும் என்பதால் நான் கணிப்புகளைச் செய்ய விரும்பவில்லை. ஆனால் அவை மிகவும் நெருக்கமாக உள்ளன. உலகளாவிய பேரழிவு மிக அருகில் உள்ளது.
நான் அமெரிக்கா அதிபராக இருந்த போது ​​மத்திய கிழக்கில் போர் இல்லை.


ஈரான் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்கள் பணத்திற்காக பட்டினியாக இருந்தனர். ஒப்பந்தம் செய்ய ஆசைப்பட்டனர். கமலா ஹாரிஸ் அவர்களுக்கு அமெரிக்கப் பணத்தை வாரி வழங்கினார். அன்றிலிருந்து அவர்கள் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து வருகின்றனர். நாட்டை நடத்தும் திறமையற்றவர்கள் அமெரிக்காவை மூன்றாம் உலகப் போரின் விளிம்பிற்கு கொண்டு சென்றனர். இவ்வாறு டொனால்டு டிரம்ப் பேசினார்.

Advertisement