அன்று சுஷ்மா... இன்று ஜெய்சங்கர்; 9 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்., மண்ணில் காலடி வைக்கும் இந்திய அமைச்சர்

2

புதுடில்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.


பயங்கரவாதிகளை ஊக்குவிப்பது, இந்திய எல்லையில் தாக்குதல் உள்ளிட்ட செயல்களால் அண்டை நாடான பாகிஸ்தானுடன் உடனான உறவை இந்தியா முற்றுலும் கைவிட்டு விட்டது. அதுமட்டுமில்லாம், ஜம்மு காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370ஐ நீக்கம் செய்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்து வருகிறது. இது மத்திய அரசு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இதனால், விளையாட்டு போட்டிகளிலும் கூட, பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுப்பு தெரிவித்து வருகிறது.


இந்த சூழலில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அமைச்சர் ஒருவர் பாகிஸ்தானுக்கு செல்ல இருப்பது உலக நாடுகளிடையே கவனம் பெற்றுள்ளது. அக்டோபர் 15 மற்றும் 16ம் தேதிகளில் இஸ்லமாபாத்தில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களான உள்ளன.


இந்த நாடுகளின் பிரதமர் அல்லது அதிபர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில், பாகிஸ்தானுடனான மோதல் போக்கு காரணமாக இந்திய பிரதமர் மோடி இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான அதிகாரிகள் பாகிஸ்தான் செல்கின்றனர்.


அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பு நாடாக இந்தியா திகழ்ந்து வரும் நிலையில், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடனான உறவில் நெருக்கம் காட்டுவதற்காகவே இந்தக் கூட்டத்தில் இந்தியா பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது.


இந்தப் பயணத்தின் மூலம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவர், கடந்த 9 ஆண்டுகளில் முதல்முறையாக பாகிஸ்தானுக்கு செல்கிறார். இதற்கு முன்பு கடந்த 2015ல் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தான் சென்றிருந்தார்.


கடந்த வாரம் ஐ.நா., பொதுச்சபையில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஒருபோதும் வெற்றி பெறாது என்று எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement