என்னைப்போல் யார் உதவி செஞ்சாங்க; கொஞ்சமாச்சும் நினைச்சுப் பார்க்கணும்; இஸ்ரேலுக்கு சொல்கிறார் பைடன்

4

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கம் செலுத்துவதற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, விரும்புகிறாரா என்பது தெரியவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.


@அதிபர் தேர்தல், பாலஸ்தீன போர், மத்திய கிழக்கு போர் பதற்றம் உள்ளிட்டவைகளுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கம் செலுத்துவதற்காக தான் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமைதி உடன்படிக்கையை ஏற்காமல் இருக்கிறாரா என்று தெரியவில்லை.


இஸ்ரேலுக்கு எனது அரசு உதவியது போல் வேறு எந்த அரசும் உதவவில்லை. அதையெல்லாம் கொஞ்சமாவது நெதன்யாகு நினைத்துப் பார்க்க வேண்டும். தங்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலளிக்க இஸ்ரேலியர்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தாமல், உயிரிழப்புகள் ஏற்படாமல், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக அணு உலை மற்றும் எண்ணெய் வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் திட்டமிடுகிறதா என்பது குறித்து விவாதித்து வருகிறோம். இஸ்ரேல் இடத்தில் நான் இருந்தால் எண்ணெய் கிடங்குகளை தாக்குவதை விட அதற்கு மாற்றான வேறு வழிகளையே யோசிப்பேன். இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.

Advertisement