ரயில்வே தனியார்மயமாகிறதா? மத்திய அமைச்சர் நெத்தியடி பதில்

8

நாசிக்; ரயில்வே துறை தனியார்மயம் ஆக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக கூறி உள்ளார்.



மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ரயில்வே பாதுகாப்புப் படையின் எழுச்சி தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;

வரும் 5 ஆண்டுகளில் ரயில்வே துறை மேலும் மாற்றம் அடையும். வந்தே பாரத், நமோ பாரத், கவச் ரயில் பாதுகாப்பு என மாற்றங்கள் இருக்கும். ரயில்வே மாற்றத்துக்கான சகாப்தம் இது. தனியார்மயம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

அதிக பாதுகாப்பு, தொழில்நுட்பம், மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை என்பதே தற்போதைய இலக்கு. ரூ.400க்கும் குறைவான கட்டணத்தில் 1,000 கி.மீ., வரை பயணிக்கலாம் என்ற நிலையை உருவாக்குவதே நோக்கம். அதனை மையப்படுத்தி வரும் 6 ஆண்டுகளில் 3,000 ரயில் சேவைகள் தொடங்கும் திட்டம் உள்ளது.

ரயில்வே பட்ஜெட்டில் ரூ.2.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 31,000 கி.மீ., புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பிரான்ஸ் நாட்டின் மொத்த ரயில் வழித்தடத்தை விட இது மிக அதிகம். ரயில்வே பாதுகாப்பு படையின் மேம்பாட்டுக்கு ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement