வங்கதேசத்தை சேர்ந்த மூவர் சிறையில் அடைப்பு

நாமக்கல்: இந்தியா - வங்கதேசம் எல்லையில் உள்ள ஆறு வழியாக, பாஸ்போர்ட் இன்றி, பலரும் இந்தியாவுக்குள் ஊடுருவி, ஆங்காங்கே பணியாற்றுவதாக தகவல் வந்தது.



நாமக்கல் அடுத்த வீசாணம் பகுதியில், வங்கதேசத்தினர் சிலர் தங்கி பணியாற்றுவதாக, தீவிரவாத குழுவை கண்டறியும் போலீஸ் பிரிவில் இருந்து, நாமக்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் கட்டட வேலையில் ஈடுபடும் நான்கு பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. வங்கதேசத்தை சேர்ந்த அந்த நால்வரும், வாடகை வீட்டில் தங்கி வேலைக்கு செல்வது தெரிந்தது.

அவர்களின் விசா, 2023, டிசம்பர் மாதத்துடன் முடிந்து விட்டது. ஒன்பது மாதங்களாக சட்ட விரோதமாக, இங்கே தங்கி இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர்கள் போலி ஆவணம் தயாரித்து, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை பெற்றிருப்பதும் தெரிந்தது.

அவர்களை கைது செய்த போலீசார், இவர்களை அழைத்து வந்தது யார்; இவர்கள், பயங்கரவாத கும்பலுடன் தொடர்பில் உள்ளனரா என விசாரிக்கின்றனர்.

Advertisement