ஹெராயின், துப்பாக்கி கடத்திய பாகிஸ்தான் ட்ரோன்: சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை

7

சண்டிகர்: பஞ்சாபின் பெரோஸ்பூரில், ஹெராயின், கைத்துப்பாக்கிகளை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ட்ரோனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.



பஞ்சாபின் பெரோஸ்பூரில், பாகிஸ்தானுக்கு சொந்தமான, ட்ரோன் ஒன்று வானில் பறந்து கொண்டிருந்தது. இதனை கவனித்த பாதுகாப்பு படையினர் ட்ரோனை சுட்டு வீழ்த்தினர். அதில் இருந்து 500 கிராம் ஹெராயின் மற்றும் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டன.



இந்நிலையில், சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன், ஹெராயின் மற்றும் கைத்துப்பாக்கி படத்தை பி.எஸ்.எப்., சமூகவலைதளத்தில் பகிர்ந்து, 'சீனாவில் தயாரிக்கப்பட்ட DJI Mavic 3 கிளாசிக் ரக ட்ரோனை பி.எஸ்.எப்., வீரர்கள் தொழில்நுட்ப வழிமுறைகளைப் பயன்படுத்தி சுட்டு வீழ்த்தினர் ' என குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக, பஞ்சாபில் பல பாகிஸ்தான் ட்ரோன்களை பி.எஸ்.எப்., படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். மார்ச் மாதம் அமிர்தசரஸ் அருகே பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட இரண்டு ட்ரோன்களை பஞ்சாப் போலீசார் பறிமுதல் செய்தனர். பிப்ரவரி மாதம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட மற்றொரு ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

Advertisement