ரயில்வே விபத்துகளை வைத்து அரசியல் செய்யாதீர்கள்; சொல்கிறார் எல்.முருகன்

4

சிவகங்கை: 'திருவள்ளூரில் நடந்த ரயில் விபத்து சிறிய விபத்து; இதனை வைத்து அரசியல் செய்யக் கூடாது' என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.


சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலியின் 244வது நினைவு தினத்தையொட்டி, சிவகங்கையில் அவரது சிலைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ரயில்வேத்துறை எண்ணற்ற மாற்றங்களை சந்தித்து வருகிறது. புல்லட் ரயில் இந்தியாவில் இயக்கப்பட உள்ளது. திருவள்ளூரில் நடந்த ரயில் விபத்து சிறிய விபத்து; இதனை வைத்து அரசியல் செய்யக் கூடாது. கடந்த 10 ஆண்டுகளில் ரயில் விபத்துகள் குறைந்துள்ளது. ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் அதற்கான காரணம் குறித்து அறிவிக்கப்படும்.


மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு விடுவித்தது. அதனை தொடர்ந்து மாநிலத்திற்கான பங்கு நிதியை நிதியமைச்சர் விடுவித்துள்ளார். மத்திய அரசு சில கோரிக்கைகள் வைத்து வருகிறது. இதனை நிறைவேற்றினால் கல்விக்கான நிதி விடுவிக்கப்படும். உதயநிதி ஸ்டாலின் முதல்வர் ஆனதால், தமிழக மக்களுக்கு எந்த பலனும் இல்லை. அவரது குடும்பத்தில் ஒருவருக்கு பதவி கிடைத்துள்ளது என்பது தான் உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement