தீபாவளியில் கத்திக்குத்து சிகிச்சை பெற்றவர் பலி

தாம்பரம், கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரத்தைச் சேர்ந்த மோசஸ், 55. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த கல்யாணராமன், 43, என்பவருக்கும் இடையே, தீபாவளியன்று, பட்டாசு வெடிப்பதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

போதையில் இருந்த மோசஸ், வீட்டில் இருந்த சிறிய கத்தியால் கல்யாணராமன் கழுத்தில் கிழித்துள்ளார்.

கல்யாணராமன், தன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, மோசசின் முகத்தில் குத்தி உள்ளார்.

பலத்த காயமடைந்த மோசஸ், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு, சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் மோசஸ் இறந்தார். ஏற்கனவே கல்யாணராமன் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து சிறையில் அடைத்த நிலையில், தற்போது இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement