பயிற்சி டாக்டர்களுக்கு உதவித்தொகை தனியார் மருத்துவ கல்லுாரியில் ஆய்வு
புதுச்சேரி: பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித் தொகை சரிவர வழங்காத புகாரை தொடர்ந்து, சுகாதார துறை அதிகாரிகள் நேற்று தனியார் மருத்துவக் கல்லுாரியில் அதிரடியாக ஆய்வு செய்து வருகிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் படிக்கும் எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் இறுதியாண்டிலும், எம்.டி., மற்றும் எம்.எஸ்., படிக்கும் மாணவர்கள் மூன்றாண்டுகள் படிப்புடன் மருத்துவமனைகளில் பயிற்சி மேற்கொள்கின்றனர்.
இதில் எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.20 ஆயிரமும், முதுநிலை மாணவர்களுக்கு முறையே ரூ.43 ஆயிரம், ரூ.45 ஆயிரம் மற்றும் ரூ.47 ஆயிரம் வழங்க தேசிய மரத்துவக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரிகள் பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித் தொகை சரிவர வழங்கவில்லை என தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு புகார் சென்றது.
அதனையொட்டி, நேற்று தனியார் மருத்துவ கல்லுாரியில் பயிற்சி கால உதவி தொகை வழங்குவது குறித்து சுகாதார அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தினர். அதில், உதவித் தொகை சரிவர வழங்காதது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அனைத்து ஆவணங்களையும் நகல் எடுத்த அதிகாரிகள், இதுகுறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செயய உள்ளனர்.