பாரதிதாசன் கல்லுாரியில் பயிலரங்கம் துவக்கம்

புதுச்சேரி: பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி தமிழ் துறையின் கணித்தமிழ்பேரவை சார்பில் இருநாள் கணினி தமிழ் பயிலரங்க துவக்க விழா நடந்தது.

கணித்தமிழ் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மணி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். கணினி துறை தலைவர் ரங்கசாமி தமிழ் மென்பொருள்கள் என்ற தலைப்பில் பேசினார். தமிழ்த் துறை தலைவர் சேதுபதி நோக்கவுரையாற்றினார்.

தொடர்ந்து முனைவர் ராஜகுமாரி, நெறயாளுகையில் நடந்த பயிலரங்கின் முதல் அமர்வில் முனைவர் செல்வப்பெருமாள், அலுவலக மென்பொருள், சொல்லாளர், விரிதாள் குறித்து விளக்கம் அளித்தார். முனைவர் ராஜலட்சுமி நெறியாளுகையில் நடந்த இரண்டாம் அமர்வில் முனைவர் ஆரோக்கியமேரி, அன்றாட வாழ்வுக்கு கணினி என்ற தலைப்பில் பேசினார்.

மாணவிகள் கணினி தமிழ் குறித்து பல்வேறு சந்தேகம் எழுப்பி விளக்கம் பெற்றனர். மாணவி அஷ்வதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவி லத்திகா நன்றி கூறினார்.

Advertisement