சிறுவர் பூங்காவில் மழைநீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம்
காரைக்கால்: காரைக்காலில் தொடர் மழை காரணமாக சிறுவர் பூங்காவில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் தொற்று நோய் பரவும் ஆபாயம்ஏற்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
இந்நிலையில் எம்.எம்.ஜி., நகர், ஸ்ரீராம் நகர், ராஜாத்தி நகர், முருகராம் நகர், எஸ்.ஏ.,நகர், இந்திரா நகர், பாரதி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள நகராட்சி பூங்கா அனைத்தும் மழைநீர் தோங்கி புதர்மண்டி விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
மேலும் குடிமகன்கள் கூடாரமாக சிறுவர்கள் பூங்கா மாறி வருகிறது.
ஒரு சில பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் துரு பிடித்து ஆபத்தான நிலையில் உள்ளன.
பூங்காவில் மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு டெங்கு, மலேரியா காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் சிறுவர் பூங்காவை துாய்மைப்படுத்தநடவடிக்கை எடுக்க வேண்டும்.