முதல் உலக அழகி 95 வயது கிகிஹகன்சன் மறைவு

கலிபோர்னியா: முதல் உலக அழகியாக மகுடம் சூட்டப்பட்ட சுவிட்சர்லாந்தின் 95 வயது கிகிஹகன்சன் (1929-2024) வயது முதுமையால் காலமானார்.

முதல் உலக அழகி போட்டி பிரிட்டன் தலைநகர் லண்டனில் 1951-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதியன்று நடைபெற்றது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மாடல் அழகியான கிகிஹகன்சன் 95, உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மாடல் அழகிகள் போட்டியாளர்களாக பங்கேற்றனர். இதில் உலகின் முதல் உலக அழகியாக கிகிஹகன்சன் மகுடம் சூட்டப்பட்டார். அப்போது அவருக்கு வயது 22, அதன் பிறகு சர்வதேச அளவில் பிரபலமானார். டி.வி. ஷோக்களிலும் பங்கேற்றார். அதற்கு முன்பாக இவர் 1951ம் ஆண்டில் மிஸ் சுவீடன் பட்டமும் பெற்றார்.


அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் வயது முதுமை காரணமாக கடந்த 4-ம் தேதி தூக்கத்தில் உயிரிழந்ததாக உலக அழகி போட்டியை நடத்தும் அமைப்பின் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதனை கிகிஹகன்சன் மகன் ஆண்டர்சனும் உறுதி செய்தார். கிகிஹகன்சன் மறைவுக்கு முக்கிய பிரபலங்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement