வேகமாக நிறைந்து வரும் கண்மாய்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி

ராஜபாளையம்: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் தொடர் மழையால் ராஜபாளையம் பகுதியல் கண்மாய்கள் நிறைந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால் வறண்டுள்ள கண்மாய்கள் நீர் வரத்தை பெற்று வருகின்றன.

தற்போதைய நிலையில் ஆற்றின் முதல் பகுதியான புதுக்குளம், பிரண்டை குளம் கண்மாய்கள் நிறைந்து மறுகால் பாய்ந்து வருகிறது. அருகிலுள்ள புளியங்குளம், வத்தராப்பேரி, மருங்கூர் கண்மாய்கள் முழு கொள்ளளவை அடைந்துள்ளது. தொடர் நீர் வரத்து ஏற்பட்டால் அடுத்தடுத்த கண்மாய்கள் மறுகால் பாயும் நிலையை அடையும்.

இந்நிலையில் விவசாயப் பணிகள் முழுமூச்சில் நடந்து வருவதால் தண்ணீர் தேவைக்கும் தட்டுப்பாடு ஏற்பாடாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால் தாமிரபரணி குடிநீர் பெறுவதிலும் நகராட்சி பகுதிக்கான குடிநீர் தேவைக்கும் பிரச்சனை ஏற்படாது என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement