லாரி கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு

விக்கிரவாண்டி: கோழித்தீவனம் ஏற்றி வந்த லாரி டயர் வெடித்து கவிழ்ந்ததில் போக்குவரத்து பாதித்தது.

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு கோயம்புத்துாருக்கு கோழித் தீவனம் ஏற்றிக் கொண்டு லாரி புறப்பட்டது. லாரியை சிவகங்கை மாவட்டம், வாகைகுளத்தைச் சேர்ந்த டிரைவர் விஜய்,30: ஓட்டினார்.

நேற்று விடியற்காலை 5:00 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், முண்டி யம்பாக்கம் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக லாரியின் வலது பக்க முன்புற டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறிய லாரி சாலையோரம் கவிழ்ந்ததில், தீவன முட்டைகள் சாலையில் சிதறின.

இதனால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது. போலீசார் விரைந்து சென்று, வாகனங்களை இடதுபுறத்தில் அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து கிரேன் மூலம் லாரியை அகற்றினர். மாற்று லாரியில் தீவன மூட்டைகளை ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement