பிரதமரின் கல்வி உதவித்தொகை

ராமநாதபுரம்: தொழிற்கல்வியில் 2024--25-ம் கல்வியாண்டில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு பயிலும் முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என புதுடில்லி மைய முப்படைவீரர் வாரியம் தெரிவித்துள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் www.ksb.gov.in என்ற இணையதள முகவரியில் நவ.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எனவே தொழிற்கல்வியில் 2024--25-ம் கல்வியாண்டில் கல்லுாரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அல்லது 04567 - 230 045 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement