மயிலம் கோவிலில் சூரசம்ஹார விழா
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி விழாவில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது
கந்தசஷ்டி விழா கடந்த 2ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. 6ம் நாளான நேற்று சூரசம்ஹாரத்தையொட்டி காலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.
பின்னர் விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகத்தை தொடர்ந்து, சுவாமி தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
இரவு 7:00 மணிக்கு பாலசித்தர் சன்னதியில் முருகன் வேல் வாங்கும் உற்சவத்தை தொடர்ந்து, இரவு 9:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. பின், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் கிரிவலம் நடந்தது.
கலெக்டர் பழனி உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.