மீனவர்களுக்கு கடன் வழங்க சிறப்பு மேளா
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்கும் சிறப்பு மேளா நவ.11 முதல் 22 வரை நடக்கிறது.
மாவட்டத்தில் மாதவனுார், புல்லங்குடி, வண்ணாங்குண்டு, ரெகுநாதபுரம், திருப்புல்லாணி, கீழக்கரை, காரான், ரெட்டையூருணி, பிரப்பன்வலசை, வாலாந்தரவை, தொண்டி, வட்டாணம், நம்புதாளை, பாரனுார், வளமாவூர், மேலகிடாரம், நரிப்பையூர், சாயல்குடி ஆகிய இடங்களில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் மீனவர்களுக்கு கடன் வழங்கும் சிறப்பு மேளா நவ.11 முதல் 22 வரை நடைபெற உள்ளது.
விருப்பமுள்ளவர்கள் மீன்வளத்துறை துணை இயக்குநர் பரிந்துரை கடிதம், மீனவர் நலவாரிய அட்டை, ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, மத்திய கூட்டுறவு வங்கியின் கணக்கு புத்தகம், வியாபாரம் செய்யும் தொழில் போட்டோ, படகு லைசென்ஸ், ஆர்.சி., புத்தகம், படகு பராமரிப்பு போட்டோ ஆகிய ஆவணங்களுடன் மேளாவில் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.