ராகுல் ஹெலிகாப்டர் தாமதம் : வேண்டுமென்றே காத்திருக்க வைக்கப்பட்டதாக புகார்
ராஞ்சி:
ஜார்க்கண்ட்டில் தேர்தல் பிரசாரத்திற்காக ராகுல் செல்ல விருந்த
ஹெலிகாப்டரை இயக்க தாமதமான சம்பவத்தில் வேண்டுமென்றே அவரை காத்திருக்க
வைத்ததாக காங்., புகார் தெரிவித்துள்ளது.
81
தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபை இரு கட்டங்களாக நடைபெறும்
தேர்தலில் 38 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 20-ல்
நடக்கிறது.
இங்கு கோடா மாவட்டத்தில் காங். வேட்பாளர்களை ஆதரித்து
பிரசாரம் செய்வதற்காக லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் ஹெலிகாப்டரில்
புறப்பட தயாரானார். ஆனால் திட்டமிட்டபடி ஹெலிகாப்டர் இயக்கவில்லை. இதனால்
அவர் ஹெலிகாப்டருக்குள் 45 நிமிடத்திற்கு மேல் அமர்ந்து செல்போன்
பார்த்துக்கொண்டிருந்தார். இதன் வீடியோ , புகைப்படங்கள் இணையதளத்தில்
வைரலானது.
இந்த விவகாரத்தில் விமான போக்குவரத்து
கட்டுப்பாட்டு ஆணையம் ராகுல் செல்லும் ஹெலிகாப்டரை இயக்க விடாமல்
வேண்டுமென்றே தாமதப்படுத்தியதாகவும் பிரதமர் மோடியின் பிரசார பயணத்திற்கு
முக்கியத்தும் தரப்படுவதாகவும் தேர்தல் ஆணையத்தில் காங். புகார்
தெரிவித்துள்ளது.