அகர்வால்ஸ் மருத்துவமனையில் இலவசமாக கண் பரிசோதனை

சென்னை டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில், 50 வயதுக்கு மேற்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு, இலவச கண் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து, மருத்துவமனையின் விட்ரியோ - ரெட்டினா துறைத் தலைவர் மனோஜ் காத்ரி வெளியிட்ட அறிக்கை:

நீரிழிவு நோயாளிகள் ஏதேனும் ஒரு வகையில், கண்பார்வை திறனிழப்பால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நோயாளிகள், ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ஆரம்ப நிலையிலேயே கண் பரிசோதனை செய்து கொள்வதன் வாயிலாக, தீவிர பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, உடல் எடையை குறைப்பது, சமச்சீரான உணவை உண்பது, உடற்பயிற்சி, மன அழுத்தமற்ற வாழ்க்கை உள்ளிட்டவை பார்வைத் திறனை பாதுகாப்பதற்கு உதவுகிறது.

உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி, சென்னையில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில், 50 வயதுக்கு மேற்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்.

பிற வயது பிரிவினருக்கு வழக்கமான கட்டணத்தில் இருந்து, 50 சதவீத தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவுக்கு, 95949 24048 என்ற எண்ணில் அழைக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement