அடடா இதுவல்லவா திராவிட மாடல் ஆட்சி; லிஸ்ட் போட்டு வானதி விமர்சனம்
கோவை: தி.மு.க., ஆட்சியில் உயரும் விலைவாசியை பட்டியல் போட்ட கோவை பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி, கூடுதல் வரியை விதித்து டீசலின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
2021- தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார்.
2022- ஆவின் பிரிமியம் பாலின் விலை லிட்டருக்கு ரூ.48ல் இருந்து ரூ.60 ஆக 25%
உயர்வு.
2022- தமிழகம் முழுவதும் சொத்துவரி 50% உயர்வு.
2023- ஆவின் 5 லிட்டர் பச்சை மேஜிக் பால் பாக்கெட்டுகளின் விலை ரூ.210-ல் இருந்து ரூ.220 ஆக உயர்வு.
2023- ஆவின் நெய்யின் விலை லிட்டருக்கு ரூ.70 வரை உயர்வு.
2024- தமிழக மக்களுக்கு மின்சாரக் கட்டணம் 2.18% உயர்வு.
2024- சென்னை மாநகராட்சியில் சொத்துவரி 6% உயர்வு.
தற்போது “என்ட்ரி டேக்ஸ் செஸ்” என்ற பெயரில் கூடுதல் வரியை விதித்து டீசலின் விலையை உயர்த்தவும் பரிசீலனை. எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது விலைவாசி உயர்வைக் கண்டித்து தெருவில் இறங்கி போராடுவது, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தபிறகு அதே விலைவாசியை கண்மூடித்தனமாக உயர்த்தி தமிழக மக்களின் வயிற்றில் அடிப்பது இதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா?, எனக் குறிப்பிட்டுள்ளார்.