குப்பையை உரமாக்கும் மையம் 30வது வார்டுக்கு மாற்றம்
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட, 51 வார்டுகளிலும் சேகரமாகும் திடக்கழிவுகள் நத்தப்பேட்டையில் உள்ள குப்பைக் கிடங்கில் சேகரிக்கப்படுகிறது.
அங்கு, மட்கும் குப்பை, மட்காத குப்பை ஆகியவற்றை தரம் பிரித்து, மட்கும் குப்பையை உரமாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
உரமாக மாற்றுவதற்கான மையங்கள் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்படுகின்றன. ஏற்கனவே, ரெட்டிப்பேட்டை, வெள்ளைகுளம் உள்ளிட்ட இடங்களில் குப்பையை உரமாக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 11வது வார்டு, செங்குந்த நகர் பகுதியில், 57.5 லட்ச ரூபாய் மதிப்பில், குப்பையை உரமாக்கும் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
ஒப்பந்த நிறுவனத்திற்கு இதற்கான பணி உத்தரவுகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அப்பகுதியில் போதிய இடவசதி இல்லாததால், 30வது வார்டுக்குட்பட்ட, அமுதபடி பின் தெருவில், குப்பை உரமாக்கும் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.