மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் போராட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
துணை தலைவர்கள் வேலு, சம்சுதீன், பெரியநாயகி முன்னிலை வகித்தனர்.
இணைச் செயலாளர்கள் அருணாசலம், பாலசுப்ரமணியம், ராஜாராம், குப்புசாமி, ஜோதி, துணை தலைவர்கள் அம்பாயிரம், விருத்தகிரி, மாவட்ட செயலாளர் ராஜாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
போராட்டத்தில், ஒய்வூதியத்தில் முத்தரப்பு ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement