மஞ்சள் காமாலை பரவல்: சுகாதார துறை பரிசோதனை

கள்ளக்குறிச்சி: அணைகரைக்கோட்டாலம் கிராமத்தில் 10க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலை நோய் பரவுவதாக தகவல் பரவியதையடுத்து சுகாதாரத்துறை அலுவலர்கள் முகாமிட்டு பொதுமக்களை பரிசோதித்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த அணைகரை கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களுக்கு நோய் பரவுவதாகவும் தகவல் பரவியது.

இதையடுத்து, ஆலத்துார் மருத்துவ அலுவலர் வைஷாலி தலைமையிலான மருத்துவக் குழுவினர் அணைகரைக்கோட்டாலம் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அதில், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட 10 பேர், தொண்டனந்தல் கிராமத்தில் இயற்கை வைத்தியம் மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, சுகாதாரத்துறை அலுவலர்கள் சம்மந்தப்பட்ட 10 பேரையும் பரிசோதனை செய்தனர்.

மேலும், அங்குள்ள 399 வீடுகளுக்கும் நேரில் சென்றும், அரசு துவக்கப் பள்ளியிலும் முகாம் அமைத்து காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளதாக என மக்களிடம் கேட்டறிந்தனர்.

Advertisement