ராசிபுரம் உழவர் சந்தையில் ரூ.10 லட்சத்துக்கு விற்பனை
ராசிபுரம்: ராசிபுரம் உழவர் சந்தையில், நேற்று, தக்காளி கிலோ, 32, கத்தரி, 55, வெண்டை, 35, புடலை, 34, பீர்க்கன்காய், 65, பாகல், 55, சுரைக்காய், 16, பச்சை மிளகாய், 30, சின்ன வெங்காயம், 55, பெரிய வெங்காயம், 80, முட்டைகோஸ், 30, கேரட், 80, பீன்ஸ், 80, பீட்ரூட், 40 ரூபாய்க்கு விற்பனையானது. வாழைப்பழம், 40, கொய்யா, 45, பப்பாளி, 20, தர்பூசணி, 20, எலுமிச்சை, 60, விலாம்பழம், 40 ரூபாய்க்கும் விற்பனையானது.
நேற்று ஒரே நாளில், 212 விவசாயிகள் தங்களது விளை பொருட்-களை விற்க கொண்டு வந்திருந்தனர். 17,860 கிலோ காய்கறி, 6,630 கிலோ பழங்கள், 370 கிலோ பூக்கள் என மொத்தம், 24,860 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையாகின. இதன் மொத்த மதிப்பு, 10.66 லட்சம் ரூபாயாகும். 5,165 பேர் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.
சாதாரண நாட்களில் சராசரியாக, 6 லட்சம் முதல், 8 லட்சம் ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகும். நேற்று ஞாயிறு விடு-முறை மற்றும் முகூர்த்தநாள் என்பதால், 10.66 லட்சம் ரூபாய்க்கு காய்கறி, கனிகள், பூக்கள் விற்பனையாகின.
நாமக்கல்லில்...
நாமக்கல் கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. நேற்று முகூர்த்த நாள் என்பதால், வழக்கத்தை விட உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. 175 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறி, பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
மொத்தம், 23,055 கிலோ காய்கறிகள் மற்றும் 4,950 கிலோ பழங்கள், 20 கிலோ பூக்கள் என மொத்தம், 28,025 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
மொத்தம், 5,605 பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வருகை தந்து காய்கறி மற்றும் பழங்களை வாங்கிச் சென்றனர். இதன் மூலம், 11 லட்சத்து, 81,170 ரூபாய்க்கு விற்பனையானதாக, உழவர் சந்தை நிர்வாக அலுவலர்கள் தெரிவித்தனர்.