முனியப்பன் கோவிலில் பூஜை பக்தர்கள் பால்குட ஊர்வலம்
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த அரியாகவுண்டம்பட்டியில் பிரசித்தி பெற்ற ஐந்து முனியப்பன் கோவில் உள்ளது. நேற்று, கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, இக்கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
காலை முதல் சுவாமிக்கு வாசனை திரவியங்களால் பல்வேறு அபிஷேகம் நடந்தது. மதியம், 100க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பழைய பி.டி.ஓ., அலுவலகம் முன்பிருந்து ஊர்வலம் தொடங்கியது.
ஆத்துார் பிரதான சாலை, அரியாகவுண்டம்பட்டி ரோடு வழியாக ஊர்வலமாக சென்ற பக்தர்கள், அரியாகவுண்டம்பட்டியில் உள்ள கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, புனித நீர், பால் ஆகிய-வற்றால் அபிஷேகம் நடந்தது. தீபாராதனைக்கு பின், அனைவ-ருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நாமகிரிப்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement