தலை துண்டான நிலையில் ஆண் சடலம்

ஈரோடு:ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் முதலாவது பிளாட்பார்மை ஒட்டி, ரயில்வே பாதுகாப்பு படை காவல் அறையை ஒட்டிய தண்டவாள பகுதியில், ஆண் சடலம் தலை துண்டாகி கிடந்தது.

ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்-துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்த நபருக்கு 60 வயது இருக்கும். நீல நிற அரைக்கை சட்-டையும், லுங்கி அணிந்திருந்தார். தண்டவாளத்தை கடந்தபோது ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என தெரிகிறது. யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து, போலீசார் விசாரணை மேற்-கொண்டுள்ளனர்.

Advertisement