அ.தி.மு.க.,வுடன் கூட்டணிக்கு மனு போடவில்லை: எச்.ராஜா..

1

புதுக்கோட்டை:: புதுக்கோட்டையில், தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா அளித்த பேட்டி:

செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் மீது குற்றச்சாட்டு எழுந்து வருடக் கணக்காகிறது. ஆனால், அவரை இதுவரை கைது செய்யவில்லை. அதேபோல, பிரதமர் மோடியை மிகவும் தரக்குறைவாக பேசிய அமைச்சர் அன்பரசன் மீது, புகார் அளித்தும் போலீசார் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், நடிகை கஸ்துாரியை பக்கத்து மாநிலத்துக்குச் சென்று, இவ்வளவு அவசரமாக கைது செய்வது ஏன்? இந்த நடவடிக்கைகளால் தான், தமிழக அரசை நடுநிலை இல்லாத அரசு என விமர்சிக்கிறோம்.

நீதிமன்ற காவலில் இருக்கும்போது தான், 'யு டியூபர்' சவுக்கு சங்கர் கை உடைக்கப்பட்டது. அதனால், கஸ்துாரிக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.

கடந்த 1967லிருந்து, கூட்டணி இல்லாமல் தி.மு.க., தேர்தலை சந்தித்ததே கிடையாது. தொடர்ந்து கூட்டணி கட்சிகள் ஆதரவோடு தான், தி.மு.க., ஆட்சி அமைத்து வருகிறது.

ஆனால், ஒருமுறை கூட ஆட்சியில் பங்கு கொடுத்ததில்லை.

அரசு மருத்துவமனைகளில் அரசு மருத்துவருக்கே பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில், எல்லா துறைகளிலும் தி.மு.க., ஆட்சி நிர்வாகம் தோற்றுள்ளது.

புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் விஜய், இத்தனையாண்டு காலம் தி.மு.க., என்ன செய்து வந்ததோ, அதையே தானும் செய்யப் போவதாகச் சொல்கிறார். மாற்று அரசியல் சிந்தனை அவரிடம் இல்லை.

கூட்டணி சேருவதற்காக, பா.ஜ., தரப்பில் இருந்து யாருக்கும் மனு போடவில்லை. அப்படி மனு எதுவும் போடாத நிலையில், அ.தி.மு.க., எங்களை புறக்கணித்து விட்டதாக சொல்வது வேடிக்கை. கூட்டணி குறித்து அகில இந்திய பா.ஜ., தலைமை தான் முடிவெடுக்கும்.

வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., 200 தொகுதிகளில் வெல்லும் என கனவு காண்கின்றனர். யாரும் கனவு காண்பதை, அடுத்தவர் தடுக்க முடியாது. தி.மு.க., - அ.தி.மு.க., என இரு கட்சிகளும் தோற்கடிக்க முடியாத கட்சிகள் அல்ல. இரு கட்சிகளும், தேர்தலில் பல முறை தோற்றுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

எச்.ராஜா, தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவர்

திராவிடம் என்பது இனம் இல்லை!

திராவிடம் என்பது இனம் கிடையாது; இடம். அதைத்தான் குறிக்கிறது. திராவிடத்தை இனம் என்று கூறுவது முட்டாள்தனம். குஜராத் மாநிலம் கூட பஞ்ச திராவிடத்தின் ஒரு பகுதிதான். திராவிடம் என்பது சமஸ்கிருத வார்த்தை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகிய ஐந்து மாநிலங் களை சேர்த்து குறிக்கும் சொல்தான் திராவிடம். அதை பேசுபவர்கள், மற்ற நான்கு மாநிலத்தவர் களையும் சேர்த்துத்தான் சொல்கின்றனரா என்பதை விளக்க வேண்டும்.

Advertisement