குப்பை அள்ளி ஒரு மாதம்... குடிநீர் வீணாகி சாலை சேதம்

சுகாதாரச் சீர்கேடு

வீரபாண்டி, கல்லாங்காடு கிழக்கு, கிருஷ்ணா நகர், முத்து நகர் பகுதியில் ரோட்டோரத்தில் குப்பை கொட்டி வைக்கப்பட்டுள்ளது. குப்பை அள்ளி ஒரு மாதமாகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

- ராமலிங்கம், முத்து நகர். (படம் உண்டு)

அரண்மனைப்புதுார், குறிஞ்சி நகரில் தேங்கியுள்ள குப்பைகளை அள்ள வேண்டும். வழிநெடுகிலும் குப்பைகள் நிறைந்துள்ளது.

- ஜெகதீஷ், அரண்மனைப்புதுார். (படம் உண்டு)

தாராபுரம் ரோடு, கரட்டாங்காடு முதல் மற்றும் இரண்டாவது வீதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அள்ள வேண்டும்.

- சதிஷ், கரட்டாங்காடு. (படம் உண்டு)

பெரிச்சிபாளையம் தெற்கு, ஊர்க் கவுண்டர் நகரில் டிரான்ஸ்பார்மர் அருகே, தேங்கியுள்ள குப்பையால், துர்நாற்றம் வீசுகிறது.

- செல்வராஜ், பெரிச்சிபாளையம். (படம் உண்டு)

வீணாகும் தண்ணீர்

திருப்பூர், மங்கலம் ரோடு, ஆர்.ஆர்., லே-அவுட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலை சேதமாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- ரங்கசாமி, ஆர்.ஆர்.,லே-அவுட். (படம் உண்டு)

பல்லடம் ரோடு, தட்டான் தோட்டம் பகுதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலையும் சேதமாகியுள்ளது.

- சின்னச்சாமி, செங்குந்தபுரம். (படம் உண்டு)

கால்வாய் அடைப்பு

அவிநாசி, ரங்கா நகர் மெயின் ரோட்டில், லில்லி பிளாசம் பகுதியில் சாக்கடை கால்வாயில் குப்பை கழிவுகள் தேங்கியுள்ளது. கழிவுநீர் வழிந்தோட வழியில்லை.

- சண்முகசுந்தரம், பழங்கரை. (படம் உண்டு)

திருப்பூர், தாராபுரம் ரோடு, அரசு மருத்துவமனை முன்புறம் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது.

- சிவா, தாராபுரம் ரோடு. (படம் உண்டு)

பணி மந்தம்

திருப்பூர், காந்தி நகர், பயர் சர்வீஸ் காலனியில் ரோடு போட சாலை தோண்டி அப்படியே விடப்பட்டுள்ளது. பணி மந்தமாக நடக்கிறது. தார் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுரேஷ்குமார், காந்தி நகர். (படம் உண்டு)

மின்சாரம் வீண்

திருப்பூர், காங்கயம் ரோடு, பத்மினி கார்டனில் அடிக்கடி பகலிலும் மின்விளக்கு எரிந்து மின்சாரம் வீணாகிறது. சரியான நேரத்துக்கு விளக்குகளை அணைத்து, மின்சாரம் வீணாவதை தடுக்க வேண்டும்.

- ராஜேந்திரன், பத்மினி கார்டன். (படம் உண்டு)

ரியாக் ஷன்

மூடி சீரமைப்பு

சின்னாண்டிபாளையம், சிவபுரத்தில் பாதாள சாக்கடை மூடி உடைந்து, கழிவுநீர் வெளியேறியது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், மூடி சீரமைக்கப்பட்டது.

- சிங்காரம், சிவபுரம். (படம் உண்டு)

சாலை சீரமைப்பு

திருமுருகன்பூண்டி ரிங் ரோடு, குண்டும் குழியுமாக இருப்பதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. சாலையில் உள்ள குழிகளை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்துள்ளனர்.

- மனோகர், அண்ணா காலனி. (படம் உண்டு)

ஒளிரும் விளக்கு

தொட்டியமண்ணரை, டவர்லைன் வீதியில் தெருவிளக்கு எரியாதது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. மாநகராட்சி மூலம் தெருவிளக்கு சரிசெய்யப்பட்டு, பளிச்சிடுகிறது.

- கலையரசி, தொட்டியமண்ணரை. (படம் உண்டு)

குப்பைகள் மாயம்

திருப்பூர், நெசவாளர் காலனி, மாரியம்மன் கோவில் கிழக்கு, ஜவஹர் நகர் இரண்டாவது வீதியில் தேங்கிய குப்பை குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மாநகராட்சி ஊழியர் மூலம் குப்பைகள் அள்ளப்பட்டு விட்டது.

- ராஜன், நெசவாளர் காலனி. (படம் உண்டு)

Advertisement