லாட்டரி மார்ட்டின் நிறுவனத்தில் ரெய்டு; சிக்கியது ரூ.12 கோடி மட்டுமே!

8

கோவை: லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டில், 12.41 கோடி ரூபாய் ரொக்கப்பணம் சிக்கியது.

பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின், பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்துகிறார். இவருக்கு சொந்தமான வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினர் பல முறை சோதனை நடத்தியுள்ளனர்.

கடந்த வாரத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். தமிழகம், மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தரபிரதேசம், மேகாலயா, பஞ்சாப் மாநிலங்களில், மார்ட்டின் தொடர்புடைய 22 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் 12.41 கோடி ரூபாய் ரொக்கப்பணம் சிக்கியது. ஏராளமான ஆவணங்கள், 6.42 கோடி ரூபாய் மதிப்புக்கு பிக்சட் டிபாசிட் ஆவணங்களும் சிக்கியுள்ளன. ஆவணங்கள் அடங்கிய டிஜிட்டல் கருவிகளும் சிக்கியுள்ளன என்று அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement