இரு மாநில தேர்தல்களில் இதுவரை ரூ. 1000 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம்

மும்பை: இருமாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் 14 மாநிலங்களில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் இதுவரை ரூ. 1000 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்ட்டில் 81 தொகுதிகளுக்கு இரு கட்ட சட்டசபை தேர்தலில் முதற்கட்ட தேர்தல் முடிந்தது, இரண்டாம் கட்ட தேர்தல் நவ. 20-ல் நடக்கிறது. தவிர 14 மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடக்கிறது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. வரும் 23-ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மஹாராஷ்டிராவில் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ரெக்கப்பணம், மது, கஞ்சா, இலவச பொருட்கள் என இதுவரை ரூ. 858 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின் போது ரூ. 103.61 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு மாநிலமான ஜார்க்கண்ட்டில் 2019 தேர்தலின் போது ரூ.18.76 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை ரூ. 1000 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த தேர்தல்களை விட 7 மடங்கு அதிகம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement