போனில் பெண்ணுக்கு தொந்தரவு மனநலம் பாதித்தவரிடம் விசாரணை

திருப்போரூர்: சென்னை, பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் அலிஷா அப்துல்லா. அப்பகுதி பா.ஜ., பிரமுகர். இவர், ஸ்கின் கேர் கிளினிக் நடத்தி வருகிறார்.

நேற்று, இவரை ஒருவர் மொபைல் போனில் தொடர்பு கொண்டுள்ளார். அவர், ஓ.எம்.ஆர்., சாலை ஏகாட்டூர் தனியார் ஹோட்டலில் தங்கி இருப்பதாகவும், ஆன்லைனில் மசாஜ் சர்வீஸ் குறித்து தேடியபோது, அலிஷா அப்துல்லா பற்றிய விபரம் கிடைத்ததாகவும் கூறி, பல வகையில் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

இதையடுத்து, அலிஷா, தன் நண்பர்களுடன் அந்த நபர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு, அந்த நபரை கண்டுபிடித்து, சரமாரியாக தாக்கி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, நீலாங்கரை போலீசில் ஒப்படைத்துள்ளார்.

போலீசார் விசாரணையில், அவர் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ஷாநவாஸ், 32, என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.

அவரை, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement