கி.கிரியில் 1,358 பயனாளிகளுக்கு ரூ.49.33 லட்சம் உதவித்தொகை
கி.கிரியில் 1,358 பயனாளிகளுக்கு
ரூ.49.33 லட்சம் உதவித்தொகை
கிருஷ்ணகிரி, நவ. 19-
கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம்
நடந்தது.
அப்போது, தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் குறைகளை கேட்டு, பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணத்தொகை, ஓய்வூதியம் மற்றும் இயற்கை மரணத்தால் இறந்தவர்கள் என, 1,358 பயனாளிகளுக்கு, 49.33 லட்சம் ரூபாயை உதவித்தொகையாக வழங்கினார்.
கூட்டத்தில், கட்டுமான தொழிலாளர்கள் பதிவு புதுப்பித்தல் மற்றும் விண்ணப்பத்தை எளிமைப்படுத்த போகும் விபரம், வீட்டு வசதி திட்டம் எளிய முறையில் பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், திட்டம் மற்றும் எளிமையாக்கப்படும் நிகழ்வையும், தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் பொன்குமார் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து அவர், கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் அமைப்புசாரா ஓட்டுனர்களின் நலவாரியத்தில், 55,267 பதிவு பெற்ற தொழிலாளர்கள் உள்ளனர்.
இதில், கட்டுமான தொழிலாளர்களின் நலவாரியத்தில், 49,834 பயனாளிகளுக்கு, 37.30 கோடி ரூபாய், உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியத்தில், 4,447 பயனாளிக்கு, 3.50 கோடி ரூபாய், அமைப்புசாரா ஓட்டுனர்களின் நலவாரியத்தில், 606 பயனாளிகளுக்கு, 49.27 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது, என்றார்.
தொழிலாளர் உதவி ஆணையர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.