இளைஞர்களுக்கு இலவச ஈஷா யோகா வகுப்புகள்

ஈஷா சார்பில் தமிழகத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை, 15 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இலவசமாக ஈஷா யோகா வகுப்புகள் வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 42 இடங்களில் இந்த வகுப்புகள் நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஈஷா அறக்கட்டளை மூலம் குறிப்பாக ஈஷா யோக நிகழ்ச்சி என்று வழங்கப்படும் யோக வகுப்புகளில் 'ஷாம்பவி மஹா முத்ரா' எனும் சக்தி வாய்ந்த பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. இந்த யோகப் பயிற்சி மக்களின் உள்நிலை நல்வாழ்விற்காக, தொன்மையான யோக அறிவியலை அடிப்படையாகக் கொண்டு சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்த குறிப்பிட்ட ஈஷா யோகா பயிற்சி மூலம் பல்வேறு உடல் மற்றும் மன நலன்களை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சென்னை, கோவை, சேலம், கடலூர், பாண்டிச்சேரி, திருச்சி என தமிழகம் முழுவதிலும் 42 இடங்களில் இந்த வகுப்புகள் நடைபெற இருக்கின்றன. இவ்வகுப்புகள் காலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை அல்லது மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை என தினசரி இரண்டு வேளையாக இவை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் இவற்றில் ஏதேனும் ஒரு வகுப்பினை தேர்ந்தெடுத்து பங்கு பெறலாம். மேலும் இதில் பங்கேற்க பதிவு செய்தவர்களுக்கு நவம்பர் 19 அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரையில் இந்த வகுப்பில் பங்குபெறுவதற்கான வழிகாட்டுதல் அமர்வு நடைபெறும்.
Latest Tamil News
இந்த ஈஷா யோகா வகுப்பில், ஷாம்பவி மஹா முத்ரா எனும் எளிமையான சக்தி வாய்ந்த பயிற்சியை கற்றுக்கொண்டு தினசரி பயிற்சி செய்து வருவதன் மூலம், உடல் நிலையில் ஆரோக்கியம், மன நிலையில் தெளிவு, உணர்ச்சியில் சமநிலை, மற்றும் சக்தி நிலையில் தீவிரம் என நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக வாழ வழி செய்கிறது. அத்துடன் ஞாபக சக்தி மற்றும் மன குவிப்பு திறன் 100 சதவிகிதம் அதிகரித்தல் மற்றும் உற்பத்தி திறன், செயல் திறன் மேம்பாடு என ஏராளமான நன்மைகள் இந்த பயிற்சியை செய்வதன் மூலம் ஏற்படுகிறது.

மேலும் உடல், மனம், உணர்ச்சி, சக்தி என மனிதனின் 4 அடிப்படை அம்சங்களை முறைப்படி கையாளுவதன் மூலம் ஒருவரின் இயல்பான அன்பு, அமைதி ஆனந்தம் மற்றும் நிறைவினை உணரும் விதமாக இந்த வகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வகுப்பில் இலவசமாக பங்கேற்க விரும்பும் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் இந்த இணைப்பில் isha.co/youth-iyp பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement