சி.பி.ஐ.,க்கு மாற்றியது ஆச்சரியம் அளிக்கிறது; மேல்முறையீடு குறித்து ஆலோசனை; அமைச்சர் ரகுபதி 'அப்டேட்'

22

புதுக்கோட்டை: 'கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றியது ஆச்சரியமாக உள்ளது. மேல்முறையீடு குறித்து ஆலோசனை செய்யப்படும் ' என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நிருபர்கள் சந்திப்பில், அமைச்சர் ரகுபதி கூறியதாவது: கள்ளச்சாராய வழக்கில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. தமிழக போலீசார் வழக்கை சிறப்பான முறையில் விசாரித்து வந்தனர். இந்த சூழலில், உயர்நீதிமன்றம் வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றியது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சிக்கும் உரிமை நமக்கு கிடையாது. ஆனால் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்பது இதுவரை எந்த அரசும் எடுக்காத ஒன்றாகும்.

மேல்முறையீடு



சி.பி.ஐ., என்பது ஒரு அமைப்பு தான். இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எந்த வழக்கையும் சிறப்பாக கையாளும் ஆற்றல் மிக்கவர்கள் தமிழக போலீசார். இந்த வழக்கையும் சிறப்பாக கையாண்டு வருகிறார்கள். இந்த தீர்ப்பு எங்களை ஆலோசிக்க செய்து இருக்கிறது. இது குறித்து அரசு வழக்கறிஞர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துவார். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து முதல்வர் ஸ்டாலின் நல்ல முடிவு எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement