கோயிலுக்கு ஸ்வெட்டர் அணிந்து வந்த பெண்ணை திட்டும் வீடிேயா பழையது என கோயில் நிர்வாகம் மறுப்பு
திண்டுக்கல்:திண்டுக்கல் காளஹஸ்தீஸ்வரர், அபிராமி அம்மன் கோயிலில் மார்கழி மாதம் பனிக்கு ஸ்வெட்டர் அணிந்து வந்த பெண்ணை காவலர் ஒருவர் திட்டுவது போல் வீடியோ வெளியாகி வைரலானது. இது பழைய வீடியோ என கோயில் நிர்வாகம் மறுத்தது.
திண்டுக்கல் காளஹஸ்தீஸ்வரர், அபிராமி அம்மன் கோயில் மார்கழி மாதம் அதிகாலையில் திறக்கப்படுவதும், பெண்கள் குடும்பத்தாருடன் வந்து வழிபாடு செய்வதும் வழக்கம்.
இந்நிலையில் குளிர் காரணமாக ஸ்ெவட்டர் அணிந்து வந்த பெண் ஒருவரிடம் கையில் கம்பு வைத்துக் கொண்டு சீருடை அணியாத நபர் ஒருவர் கோயிலுக்குள் ஸ்வெட்டர் அணிந்து போகக்கூடாது என்று திட்டுவது போலவும், உடனடியாக பெண் பக்தரும் ஸ்வெட்டரை நீக்கி விடுவது போலவும் வீடியோ நேற்று பரவியது.
கோயில் செயல் அலுவலர் யுவராஜா கூறியதாவது:
இது ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வந்த பழைய வீடியோ. அப்போதே இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு போலீசார் விசாரணை நடந்தது.
தற்போது வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு பரப்புகின்றனர். இது முழுவதும் வதந்தியே பக்தர்கள் நம்ப வேண்டாம் என்றார்.