அண்ணா பல்கலையில் இன்று கவர்னர் ஆய்வு!

31

சென்னை: அண்ணா பல்கலையில் இன்று (டிச.,28) கவர்னர் ரவி ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


சென்னை அண்ணா பல்கலையில் கடந்த 23ம் தேதி இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவ்விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளி ஆளுங்கட்சியைச் சேர்ந்தவன் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், ஆளும் தி.மு.க., அரசு இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.


இந்நிலையில், பல்கலை வேந்தரான கவர்னர் ரவி, இன்று நண்பகல் 12:30 மணியளவில் அண்ணா பல்கலையில் ஆய்வு செய்ய உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement