பினாயூர் சாலையில் புதிய பாலப்பணி தீவிரம்
உத்திரமேரூர்,:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 400 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது.
இந்த ஏரிக்கு பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில் இருந்து,பினாயூர்பாலாறு வழியாக தண்ணீர் செல்லும் வரத்து கால்வாய் உள்ளது.
இந்த நீர்வரத்து கால்வாய் இணைப்பாகபினாயூர்சாலையில் தரைபாலம்அமைந்துள்ளது. இந்த தரைப்பாலம் சேதம் அடைந்ததையடுத்து, சீரமைக்க கோரிக்கை எழுந்தது.
மேலும்,இந்தப் பாலத்தின் கீழே உள்ள தரைதளம், கால்வாயை காட்டிலும் உயரமாக உள்ளது.
இதனால், மழைக்காலத்தில், பாலாற்றில் இருந்து ஏரிக்கு செல்லும் தண்ணீர், தரைபாலம் பகுதியில் தடைபட்டு தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே, சேதம் அடைந்த இந்த தரைபாலத்தை இடித்து கால்வாய் அளவிற்கு சமமாக அமைப்பதோடு, பாலத்தை உயரமாக கட்டமைக்க தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக நபார்டு திட்டத்தின் கீழ், 2.63 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன் பணி துவங்கியது.
வடகிழக்கு பருவமழையால், சில நாட்கள் நிறுத்தம் செய்யப்பட்டிருந்த இப்பணி தற்போது மீண்டும் துவங்கி தீவிரமாக நடக்கிறது.