மாணவி பாலியல் வழக்கு விசாரணை: அண்ணாமலை சந்தேகம்
சென்னை: '' அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை எழுப்புகிறது,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை எழுப்புகிறது. உயர் கல்வித்துறை அமைச்சர், இன்று மீடியாக்களிடம் பேசுகையில், முதலில் போலீசாரிடம் புகார் அளித்த பிறகே, பல்கலைக்கழகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்.
ஆனால், நேற்று மீடியாக்களைச் சந்தித்த சென்னை போலீஸ் கமிஷனர் ஆணையர், பல்கலைக்கழகத்தின் குழு மூலமாகவே போலீசுக்கு புகார் வந்தது என்று கூறுகிறார். ஏன் இத்தனை முரண்பாடுகள்? உண்மையில் யாரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது? உண்மையில் என்ன நடந்தது?
அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மாணவி, குற்றவாளிக்குத் தொலைப்பேசி அழைப்பு வந்ததாகத் தெரிவித்ததாகவும், சார் என்று கூறி, குற்றவாளி பேசியதாகவும் தெரிவித்ததாக முதலில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதனை அப்படியே வெளிவராமல் மறைக்கும் முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் வரை தமிழக பா.ஜ., இதனை விடப் போவதில்லை. பிரச்னையை மடைமாற்றி, உண்மையை மறைத்துவிடலாம் என்ற நோக்கம் தி.மு.க., அரசுக்கு இருக்குமேயானால், தி.மு.க., அரசுக்கும் இந்தக் குற்றத்தில் தொடர்பு இருப்பதாகத் தான் கருத முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (20)
Constitutional Goons - Tamilnadu,இந்தியா
27 டிச,2024 - 20:43 Report Abuse
அண்ணாமலை மீது பலருக்கு பலவருடம் சந்தேகம்தான்.
0
0
Reply
Dhurvesh - TAMILANADU,இந்தியா
27 டிச,2024 - 19:10 Report Abuse
இது POPCORN க்கு GST போட்ட விசயத்தை மடை மாற்ற அண்ணாமலை சேயும் முயற்சி
0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
27 டிச,2024 - 18:55 Report Abuse
வட்ட கட்சிப் பிரமுகர் ..... துமு உடன் போட்டோவில் இருக்கிறான் ... ஒரு அமைச்சருடன் போட்டோவில் இருக்கிறான் என்றால் செல்வாக்குடன் வலம் வந்துள்ளான் என்றே பொருள் ..... மாணவி சார் சார் என்று ஞானசேகரன் பேசியதாக சொல்கிறார் ... ஆனால் கமிஷனர் வேறு யாரும் சம்பவத்தில் இடம்பெறவில்லை .... சம்பவம் நடந்த பொது ஞானசேகரனின் போன் ஏரோபிளேன் மோடில் இருந்தது என்று சொல்கிறார் ..... ஆடி காரில் வந்தது யார் ?? பலவற்றை மறைத்து குற்றவாளிகளை காப்பாற்றினாலும் எனக்கு ஓட்டுக்கு பணம், பிரியாணி, கொலுசுவந்தா போதும் என்று சராசரி மக்கள் நினைத்தால் இதற்கெல்லாம் விடிவேது ????
0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
27 டிச,2024 - 18:55 Report Abuse
படுபாவி பெண்ணை கெடுத்தமும் இல்லாமல் காலிலும் கைகளிலும்மாவு கட்டுக்கட்டுகளை போட்டுக்கொண்டு போஸ் கொடுப்பதற்கு போலீசு உதவியுள்ளாரா அவனுக்கு காலிலும் கைகளிலும்
என்ன ஆச்சு கட்டை அவிவிழ்த்தால் எல்லாமே வெளி வந்துவிடும் அது அரசியல் கட்சிகளின் தூண்டுதல் கட்டப்பட்ட கட்டு வெறும் வேஷக்கட்டு. உண்மையும் அவனுக்கு கால் கைகளில் எந்தவித காயங்களும் கிடையாது கணம் கோர்ட்டார் அவர்களே இதை முதலில் கவனியுங்கள்
0
0
Reply
A P - chennai,இந்தியா
27 டிச,2024 - 17:40 Report Abuse
திரு அண்ணாமலை சந்தேகப் படுவது இருக்கட்டும். நீங்கள்தான் வெளிப்படையாகச் சொல்லுங்களேன் அந்த " SIR " யாரென்று.
0
0
Reply
Sidharth - ,இந்தியா
27 டிச,2024 - 16:59 Report Abuse
இவருக்கு ஏதுலதான் சந்தேகம் இல்ல
0
0
kumar - ,
27 டிச,2024 - 17:14Report Abuse
ஒரு ips அறிவுக்கும் உன் அறிவுக்கும் இருக்கும் வித்தியாசம் தான் அந்த சந்தேகம்
0
0
Duruvesan - Dharmapuri,இந்தியா
27 டிச,2024 - 17:20Report Abuse
ஹிந்து பெயரில் மூர்கன் திரிவது ஏன்
0
0
Reply
அப்பாவி - ,
27 டிச,2024 - 16:56 Report Abuse
உண்மை வரணும்னா அந்த மாணவியும் விசாரிக்கப் படணும். அதுவரை தினமும் சாட்டையடிதான்.
0
0
Duruvesan - Dharmapuri,இந்தியா
27 டிச,2024 - 17:20Report Abuse
மூர்கனுக்கு அவன் குடும்பத்துல நடந்தா தான் வலி தெரியும்
0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
27 டிச,2024 - 16:45 Report Abuse
அந்த சார் யாரு ???? அவனுடன் போட்டோவில் இருந்த ஆளா ????
0
0
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,இந்தியா
28 டிச,2024 - 06:21Report Abuse
ஒரு போடாடோல மா.சு. அடுத்ததுல துணை முதல்வர்... யாரா இருக்கும்??
0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
27 டிச,2024 - 16:35 Report Abuse
முதலில் குற்றவாளியின் தொலைபேசிக்கு வந்த அழைப்புக்களை ட்ரேஸ் செய்ய வேண்டும். அணைத்து அழைப்புக்களையும் தீர்க்கமாக சிபிஐ யை வைத்து விசாரிக்க வேண்டும். காவல்துறை சொன்னது போல ஏர்பிளேன் மோடு வைத்து ஜிபிஎஸ் தகவல்களை தவிர்த்து இருக்கும் விதத்தில் செட்டப் செய்ய தெரிந்தவன் என்றால் இதே போல வேறு சிலரையும் சாய்ந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. மாநில அரசு விசாரித்தால் குற்றம் மறைக்கப்படவே வாய்ப்பு இருக்கிறது.
0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
27 டிச,2024 - 16:27 Report Abuse
ஸ்டாலின் துணைவியார் திருக்கோயில்களுக்கு வெற்றியிலை பாக்கு பழத்துடன் சென்று பிராத்தித்தது இவர்ஸ்டாலின் குடும்பத்தை காப்பாற்றியது. பிராத்தனை பலன் முடிந்தது. காவல்துறை கைவசம் வைத்துள்ள மனிதரைஎந்த எந்த பிரார்த்தனை இனிமேல் பலிக்காது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திடம் ஸ்டாலின் துணைவியார் மனமுருகி மன்னிப்பு கேட்டால் தணடனை குறைவாய் இருக்கும்.
0
0
Reply
மேலும் 6 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement