மின்கம்பத்தை அகற்றாமல் கால்வாய் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பால்நல்லுார் ஊராட்டிசிக்குட்பட்ட பால்நல்லுார் கண்டிகயை பகுதியில் 60 க்கும் அதிகமான வீட்டுகள் உள்ளன. இங்குள்ள மாதா தெருவில், மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லதால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடியது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

எனவே, இப்பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, ஆறு மாதத்திற்கு முன், பல லட்சம் ரூபாய் செலவில், மாதா கோவில் தெருவில் புதிதாக மழைநீர் கால்வாய் மற்றும் சாலை அமைக்கப்பட்டது.

ஆனால், அங்கு கால்வாய் நடுவே உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்காமல், அப்படியே மழைநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்ட மழைநீர் கால்வாயில் 3 மின் கம்பங்கள் உள்ளதால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், முறையாக வெளியேர வழியில்லாமல் கால்வாயில் தேங்குகிறது.

இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு கடித் தொல்லையில் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் வெள்ள நீர் கால்வாயில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும். மழைநீர் வீடுகளில் புகுந்து வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் கால்வாய் நடுவில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement