சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் மூவர் கைது

கரூர்:கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகில் குப்பம் பகுதியில் தேங்காய் நார் தயாரிக்கும் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு, வடமாநிலங்களை சேர்ந்த பலர் பணிபுரிகின்றனர். இங்கு, வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருவதாக, க.பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, அங்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த முகமது ஆலம், சபீனா சர்தார், பிலால் உசேன் ஆகிய மூன்று பேரும் வங்கதேசத்தில் இருந்து, இந்தியாவிற்கு சட்ட விரோதமாக குடியேறியதும், இந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிந்தது.

மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Advertisement