மீனவர்கள் மோதல்: படகுகள் சேதம்
திருநெல்வேலி,:கூடங்குளம் அருகே இடிந்தகரையில் மீனவர்கள் இருதரப்பாக மோதிக்கொண்டதில் 5 பேர் காயமுற்றனர். படகு கள், வலைகள் சேதம் அடைந்தன.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ளது இடிந்தகரை. மீனவர் கிராமம். நேற்று முன்தினம் இரவு கிறிஸ்துமஸ் விழாவையொட்டி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தெருவில் நாய் குரைத்தது தொடர்பாக இரு தரப்பாக மோதிக் கொண்டனர். மோதலில் 5 பேர் காயமடைந்தனர். கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த பைபர் படகுகளை சேதப்படுத்தினர்.
இருதரப்பு மோதலால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. கூடங்குளம் போலீசார் கணேசன், தீபக் ஆகிய இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து சிலரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement