‛காஸ் பைப் லைன்' பணிக்கு பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஒரகடம் செல்லும் சாலையில் உள்ளது. இவ்வழியே நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
ஒரகடம் சிப்காட் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. பண்ருட்டி, மேட்டுப்பாளையம், குண்ணம், எச்சூர் கிராமத்தின் இந்த சாலையை பயன்படுத்தி சென்று வருன்றனர்.
இந்நிலையல், இயற்கை எரிவாயு வினியாகம் செய்ய, இந்த சாலையோரம் பைப்
லைன் போடப்பட்டு வருகிறது. இதற்காக, தேண்டப்பட்ட பள்ளத்தில் தடுப்பு இல்லாமல் உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கம் போது, பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, விபத்து ஏற்படுவதை தடுக்கம் வகையில், தடுப்பு அமைத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.