ஜன.21ல் முதல்வர் சிவகங்கை வருகை
சிவகங்கை:முதல்வர் ஸ்டாலின் ஜன.,21,22 ஆகிய இருநாட்கள் சிவகங்கையில் ஆய்வு கூட்டம், நலத்திட்ட உதவி வழங்கும் விழாக்களில் பங்கேற்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் மாவட்ட வாரியாக அரசு துறைகளில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
அதன்படி ஜன.,21 ல் காரைக்குடி வருகிறார். அழகப்பா பல்கலை வளாகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், ரூ.பல கோடியில் கட்டியுள்ள தமிழ் நுாலக கட்டடத்தை திறந்து வைக்கிறார்.
காரைக்குடியில் அன்று இரவு தங்கும் முதல்வர் ஜன., 22 காலை சிவகங்கை வருகிறார். கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் துறை ரீதியான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று விட்டு, மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி வளாகத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
முதல்வர் வருகை குறித்து முன்னேற்பாடு பணிகள், அரசு துறைகளில் வழங்கப்பட உள்ள நலத்திட்ட உதவி பட்டியல் தயாரித்தல் குறித்த பணிகளை செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் ஆஷா அஜித் மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.