பென்னலுார் சாலை படுமோசம் சீரமைக்கும் பணி எப்போது?

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட பென்ன லுார் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

சென்னை -- பெங்களூருதேசிய நெடுஞ்சாலையில்,ஸ்ரீபெரும்புதுார் துணை மின் நிலையம் அருகே பிரிந்து செல்லும் பென்னலுார் சாலை, 4 கி.மீ., துாரம் உடையது. சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.

இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாலை, தற்போது சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. கரடு, முரடாக மாறியுள்ள இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர். மேலும், உடல் ரீதியான பிரச்னைகளையும் சந்தித்துவருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பென்னலுார் கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement