அகத்தீஸ்வரர் கோவிலில் 29ல் துாய்மை பணி

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டையில், ஆறுமுக சுவாமி மலைக்கோவிலின் தென் கிழக்கு அடிவாரத்தில் அமைந்துள்ளது அகத்தீஸ்வரர் கோவில். இந்த கோவிலில் நித்திய வழிபாடுகளுடன், சோமவார பூஜை, பிரதோஷ வழிபாடு, சிவராத்திரி, ஆருத்ரா உள்ளிட்ட வைபவங்கள் நடந்து வருகின்றன.

பொதட்டூர்பேட்டையில், உழவார மன்றங்களும், சிவபூத கண வாத்திய குழுவினரும் உள்ளனர். விழாக்காலங்களில் இவர்களின் பணி அளப்பறியது.

சிவனுக்கே உரிய சிவபூத கண வாத்தியங்களை இசைப்பதில் இவர்களுக்கு அலாதி ஆர்வம்.

இந்த குழுவில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இடம் பெற்றுள்ளனர். ஆருத்ரா திருவிழா கொண்டாப்பட உள்ள நிலையில், நாளை மறுதினம், இந்த கோவிலில் சிவனடியார்கள், பகுதிவாசிகள், துாய்மை பணி மேற்கொள்ள உள்ளனர்.

Advertisement